Saturday, October 18, 2008

நேரம்!

மன்னன் ஆணையிட்டான்.

நிழல் விழாத கோபுரம்
ஆளுயர சிவலிங்கம்
ஒரே கல்லில் நந்தி.

சிங்கள அடிமைகளின்
ரத்தம் வியர்வை கண்ணீர்
மூன்றும் கலந்த வண்ணக்கலவை
மன்னனின் கனவை நிஜமாக்கியது.

அவனையும் வாசலில்
சிலையாக வடித்தார்கள்.

காவேரி கண்ணடிதபோதெல்லாம்
மன்னன் கொடுத்த மானிய நிலங்கள்
பொன்னாக விளைந்தது.

மக்கள் தின்றனர்
மாக்களும் தின்றன

லிங்கனார்க்கும்
நந்தியார்க்கும்
நைவைதியம் நடந்தது.

கோவில் வாசலில்
கற்சிலையாக நின்றபடி

கம்பீரமாய் மன்னன்-
பட்டினி கிடந்தான்..

(02/08/1994 இல் எழுதியது... )





Wednesday, October 15, 2008

செருப்பு (1988)

இதன் விலை
கையைக் கடிக்கிறது
வாங்கிப்போட்டால்
இது
காலை கடிக்கிறது...

Monday, October 13, 2008

என் பழைய பனை ஓலைகள்

எப்போதோ கல்லூரி காலங்களில் எழுதிய கவிதைகளை மீண்டும் தொகுக்கும் ஒரு முயற்சி.. ஒரு புத்தகம் போட வேண்டும் என்ற பழைய கனவு?!