மன்னன் ஆணையிட்டான்.
நிழல் விழாத கோபுரம்
ஆளுயர சிவலிங்கம்
ஒரே கல்லில் நந்தி.
சிங்கள அடிமைகளின்
ரத்தம் வியர்வை கண்ணீர்
மூன்றும் கலந்த வண்ணக்கலவை
மன்னனின் கனவை நிஜமாக்கியது.
அவனையும் வாசலில்
சிலையாக வடித்தார்கள்.
காவேரி கண்ணடிதபோதெல்லாம்
மன்னன் கொடுத்த மானிய நிலங்கள்
பொன்னாக விளைந்தது.
மக்கள் தின்றனர்
மாக்களும் தின்றன
லிங்கனார்க்கும்
நந்தியார்க்கும்
நைவைதியம் நடந்தது.
கோவில் வாசலில்
கற்சிலையாக நின்றபடி
கம்பீரமாய் மன்னன்-
பட்டினி கிடந்தான்..
(02/08/1994 இல் எழுதியது... )
3 comments:
\\கம்பீரமாய் மன்னன்-
பட்டினி கிடந்தான்..\\
என்ன சொல்றீக
அருமையான் வரிகள். தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி
கவிதை நெம்ப அருமையா இருக்கு தம்பி.....!!!!
Post a Comment