Tuesday, August 17, 2010

நினைவுகள்...

மலை அடிவாரத்தை ஒட்டியிருந்த
பரந்த பச்சைவெளி பிரதேசத்தை
திடீரென்று
கூவிக் கிழித்தோடியது
நீலவண்ணம் பூசிய இரயில் வண்டியொன்று.

பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித்தரும்
ஒரு சாதாரண சாயங்கால பொழுதினில்
தடாலடியாய் நினைவில் வரும் உன்
கத்தரிப் பூப்போட்ட பாவடையும்,
வெள்ளைத் தாவணி முனையில்
நீ லாவகமாய் துடைத்தெடுக்கும்
உன் முன் நெற்றி வியர்வைத் துளிகளையும் போல்!

----------------

ஒரு விடிகாலை பயணத்தில்
கார்க்கண்ணாடி வழிதெரிகின்ற
கொடி படர்ந்த அடர்ந்த மரங்கள் மற்றும்
மலை உச்சியிலிருந்து
ஒற்றை வெள்ளை கோடாய் விழும் சிற்றருவி
சந்தோசமாய் சிறகடிக்கும் சோடிப் பறவை

இப்படியாய்
இத்தனை வருடங்கள் கழிந்த பின்பும்
நான் மட்டுமே
என்னோடு இருக்க நேரிடும் தருணங்களில் -
உன் நினைவு
வரமால் போய் விடுகிறதா என்ன?

2 comments:

விக்னேஷ்வரி said...

ரெண்டு கவிதைகளுமே செம. முதல் கவிதை ரொம்பப் பிடித்தமானதாய் இருக்கிறது.

Unknown said...

நன்றி விக்னேஷ்வரி.....