"நான்கு சுவர்களுமே சொந்தமில்லாத அடுக்ககத் தள வீடுகளின் வாசல்களில் ஒரு பாம்புப் பிடாரனோ, மல்லிகைப் பூக்காரியோ, தராசும் அரிவாள்மனையுமாக ஒரு மீன் வியாபாரியோ, குடுகுடுப்பைக்காரன் அல்லது வழி தவறிய குடிகாரனோ எப்படி வர முடியாதோ அதே போலத்தான் கவிதைகளும் வர முடியாத ஒரு விதமான வாழ்வில் நாம் இருக்கிறோம்". - வண்ணதாசன்
நடுச்சாமம் சற்றே நகர்ந்த அதிகாலைச் சாலையில் விமானதளம் விரைகையில் குறுக்காக கிடந்த அந்த சாலையோரச்சடலத்தின்மேல் படாமல் வண்டியை ஓட்டுனரும் பார்வையை நானும் திருப்பிய லாவகம்... ஊர் வந்திறங்கி வேலை முடித்து வந்த ஊர் பிரசித்தமெல்லாம் வாங்கிபோட்டு விமானம் ஏறிஇறங்கி வீடு திரும்புகையில் - காலையில் காரை நிறுத்தியிருக்கலாமோ?