Wednesday, October 7, 2009

இது உங்களுடைய பேனாவா?

மன்னியுங்கள் என்னை.
இது உங்களுடைய பேனாவா?

வங்கியில் வரிசையில் நின்ற
எல்லோரிடமும் கேட்டாகிவிட்டது
இட வலமாய் அசைகின்றன
எல்லா தலைகளும்.


நல்ல பேனா.
நாற்பது ரூபாய் பெரும்.

ஆனால் எடுத்து போக முடியாயது.

போனவாரம் -
ஒரு சிறிய பென்சில் துண்டு
தன்னிடம் வந்ததெப்படிஎன்று
சொல்ல தெரியாத -
நாலரை வயது மகளுக்கு
நான் செய்த உபதேசங்கள்!!

இந்த பேனாவை நான்
என்னுடன்
எடுத்து செல்ல இயலாது.

மன்னியுங்கள் என்னை.
இது உங்களுடைய பேனாவா?


Tuesday, October 6, 2009

படித்ததில் பிடித்தது....

"நான்கு சுவர்களுமே சொந்தமில்லாத அடுக்ககத் தள வீடுகளின் வாசல்களில் ஒரு பாம்புப் பிடாரனோ, மல்லிகைப் பூக்காரியோ, தராசும் அரிவாள்மனையுமாக ஒரு மீன் வியாபாரியோ, குடுகுடுப்பைக்காரன் அல்லது வழி தவறிய குடிகாரனோ எப்படி வர முடியாதோ அதே போலத்தான் கவிதைகளும் வர முடியாத ஒரு விதமான வாழ்வில் நாம் இருக்கிறோம்".
- வண்ணதாசன்