Friday, September 26, 2014

செப்டம்பர் -



#இந்த முறை, மழை மும்பையை விடமட்டாமல் அடம் பிடிக்கிறது..

#மோடி அமெரிக்கா விஜயம்.. அமெரிக்கன் இன்டியன்ஸ், இந்தியன்  அமெரிகான்ஸ்,அண்ட் ஆல் இன் ஆல் அமெரிகான்ஸ் எல்லாரும் புதுத்துணி எடுத்து வீட்டுக்கு வெள்ளையடித்து கொண்டாடுகிறார்கள்... திரும்பி வரும்போது விமானம் நிறைய டாலர்ஸ் கொண்டுவரப்போகிறார்.. இந்தியாவுக்கும் மோடிக்கும் குரு பார்வை..

#விஜய் என்ற புலியாய் வளர்க்கப்பட்ட புலி, டெல்லி ஜூவில் புலிப்பள்ளத்தில்  தானாக விழுந்த ஒருவரை தாக்கி கொன்ற வீடியோ வாட்சப் ஊர்வலம் வருகிறது. ஜூவிலேயே பிறந்து வளர்ந்த விஜய், தாக்குதல் கொல்லுதல்  எல்லாம் அறியாத விஜய், என்ன செய்யலாம் வந்து விழுந்தவனை என்று யோசித்து நிற்கையில், நமது திருவாளர் பொதுஜனம் கத்தி கல்எறிந்து, புலி என்ற விஜய்க்குள் இருந்த மிருகத்தை எழுப்பிவிட்டு,  விஜயை கொலைகாரனாக்கிவிட்டது.. வாட்சப் வீடியோ இந்நேரம் விஜய்க்கும் வந்திருக்கும்..

#மங்கல்யான் செவ்வாயை நெருங்கி சுற்ற ஆரம்பித்துவிட்டது.. ஷங்கரின் அடுத்த படத்துக்கான லோகஷன் தயார்..   ISRO  பூமியின் ஒட்டுமொத்த மூவர்ஸ் அண்ட் பேக்கர்ஸ் ஆகும் நாள் வெகு தூரத்தில் இல்லை..  செவ்வாயே  நமக்கு கூப்பிடும் தூரம்தான்..

#ஐந்தில் வளையாதது ஆறில் வளைகிறதே? #iphone6

#சிவசேனா  பஜாபாவை மகாராஷ்டிராவின் எதிரி என்கிறது.. First  day  after the divorce .. போகப்போக என்னவெல்லாம் படிக்க நேரிடுமோ.. பயமாக இருக்கிறது..

#டைம்ஸ் ஒப் இந்தியா என்கிற  ஷாப்பிங் லிஸ்ட் கம் ப்ராடக்ட் கேட்லாக் தினம் வீடு வருகிறது.. மாதக்கடைசியில் எடைக்குப்போட்டால் போட்டா காசு ரிடர்ன்.. நஷ்டமேதுமில்லை... நீங்கள் ஷாப்பிங் செய்தால் கம்பனி பொறுப்பில்லை....

Saturday, August 6, 2011

........

தியான நேரத்தில்
கடிகாரத்தின் டிக் டிக் டிக்
ஆபீசுக்கு நேராமாச்சு!

Tuesday, May 17, 2011

Pepper

Taking an early morning flight, should say too early morning flight, is always tough. Just back from a back to back (bag to bag) trip from Delhi, when the airline guy asked "any spice jet passengers to Delhi" I raised my hand though I am booked for a flight to Chennai!!
Moral of the story is, a good night sleep is very important!!

Coming to the topic, Spice Jet named the aircraft which I took today as "pepper"!!

Wednesday, May 4, 2011

......

பல வருடங்களுக்குப்பிறகு
கனவில் வந்த பழைய காதலி
இன்னமும் அதே பாவாடை தாவணியில்..

Thursday, January 27, 2011

துரோகம்

நீர்தான் செய்தீரென்று

நீரே வந்து சொன்னாலும்

நம்ப முடியாத காரியத்தை

நீர்தான் செய்தீர் என்று

நிரூபனமனபோது -

உமக்காய்

வடக்கிருக்கக் காத்திருந்த

கோபெருஞ்சோழனை

நீரே

விஷம் வைத்துக்

கொல்லாமல் கொன்றதை

வரலாறு சொல்லாவிட்டாலும்

மரணப்படுக்கையில்

மனசாட்சி

மரிக்கவிடாமல் கொல்லும்போது

சொல்லி அனுப்புங்கள்

வந்து

மன்னித்துவிட்டு போகிறேன்..

Friday, January 21, 2011

டெல்லி

இதமான குளிர்
ஏனில்லை நீ அருகில்

அருகிலுருக்கையில்
தூரமாயும் -
தூரதிலிருக்கையில்
அருகிலுமாயிருக்க

உன்னால் மட்டும்தான் முடியும்!

Tuesday, August 17, 2010

நினைவுகள்...

மலை அடிவாரத்தை ஒட்டியிருந்த
பரந்த பச்சைவெளி பிரதேசத்தை
திடீரென்று
கூவிக் கிழித்தோடியது
நீலவண்ணம் பூசிய இரயில் வண்டியொன்று.

பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித்தரும்
ஒரு சாதாரண சாயங்கால பொழுதினில்
தடாலடியாய் நினைவில் வரும் உன்
கத்தரிப் பூப்போட்ட பாவடையும்,
வெள்ளைத் தாவணி முனையில்
நீ லாவகமாய் துடைத்தெடுக்கும்
உன் முன் நெற்றி வியர்வைத் துளிகளையும் போல்!

----------------

ஒரு விடிகாலை பயணத்தில்
கார்க்கண்ணாடி வழிதெரிகின்ற
கொடி படர்ந்த அடர்ந்த மரங்கள் மற்றும்
மலை உச்சியிலிருந்து
ஒற்றை வெள்ளை கோடாய் விழும் சிற்றருவி
சந்தோசமாய் சிறகடிக்கும் சோடிப் பறவை

இப்படியாய்
இத்தனை வருடங்கள் கழிந்த பின்பும்
நான் மட்டுமே
என்னோடு இருக்க நேரிடும் தருணங்களில் -
உன் நினைவு
வரமால் போய் விடுகிறதா என்ன?

Thursday, August 12, 2010

முக நக

அவர் பால்ய நண்பரோ

பள்ளி / கல்லூரி தோழரோ இல்லையென்றாலும்-

பழகிய சிநேகிதர்.

பல்பொருள் அங்காடியில்

பற்பசை பிரிவில் இருந்த நான்

அடுத்தவர்க்கு இம்சையில்லாமல்

கூப்பிடும் தூரத்தில்தான் இருந்தது -

அவர் இருந்த

ஊறுகாய் பிரிவு.

இரவு பத்து மணிக்கு

பதினைந்து நிமிடங்கள்!

கடை அடைக்க போவதாகவும்

கவுண்டருக்கு உடனே வரச்சொல்லியும்

ஒலிபெருக்கி எச்சரிக்கைகள்!


மனைவி கொடுத்த பட்டியலில்

பாதிதான் தேடி முடிந்திருக்கிறது -

இதற்கிடையில்

நட்பாவது, நார்தங்கயாவது!


அவர் என்னை பார்த்த இமைக்கும் நேரத்திற்கும்

இடைப்பட்ட நேரத்திற்குள் -

பற்பசை அட்டையில் காலாவதி தேதியை

கூர்ந்து பார்ப்பதாக பாசாங்கு செய்ய -

அவரும் கூப்பிடவில்லை!

நல்ல வேலை

நான் பார்க்கவில்லை - அவர்

நடையில் தெரிந்த சந்தோசம்!

பாவம்-

அவர் கையிலும் ஒரு பட்டியல் இருந்தது!



Friday, July 2, 2010

பாசம்

விடிகாலைப் பொழுதில்
ஆடை விலகி
அயர்ந்து தூங்கும்
ஐந்து வயது மகளை
சீர் செய்து
போர்வை போர்த்துகையில்
மின்னலாய் வந்துபோனது
ஒன்னாம் தேதி
பணம் அனுப்ப மட்டுமே
நினைவில் வரும்
அப்பாவின் ஞாபகம்!






Friday, June 11, 2010

நம்ம மதுரை!

Namma Madurai
என் விழுதுகள் எங்கெங்கோ வியாப்பித்து இருந்தாலும் என் வேர்கள் இருப்பது இங்கேதான்!! இங்கேதான்!!

Kumbakonam...

Tamil Nadu, March 2010

Wednesday, October 7, 2009

இது உங்களுடைய பேனாவா?

மன்னியுங்கள் என்னை.
இது உங்களுடைய பேனாவா?

வங்கியில் வரிசையில் நின்ற
எல்லோரிடமும் கேட்டாகிவிட்டது
இட வலமாய் அசைகின்றன
எல்லா தலைகளும்.


நல்ல பேனா.
நாற்பது ரூபாய் பெரும்.

ஆனால் எடுத்து போக முடியாயது.

போனவாரம் -
ஒரு சிறிய பென்சில் துண்டு
தன்னிடம் வந்ததெப்படிஎன்று
சொல்ல தெரியாத -
நாலரை வயது மகளுக்கு
நான் செய்த உபதேசங்கள்!!

இந்த பேனாவை நான்
என்னுடன்
எடுத்து செல்ல இயலாது.

மன்னியுங்கள் என்னை.
இது உங்களுடைய பேனாவா?


Tuesday, October 6, 2009

படித்ததில் பிடித்தது....

"நான்கு சுவர்களுமே சொந்தமில்லாத அடுக்ககத் தள வீடுகளின் வாசல்களில் ஒரு பாம்புப் பிடாரனோ, மல்லிகைப் பூக்காரியோ, தராசும் அரிவாள்மனையுமாக ஒரு மீன் வியாபாரியோ, குடுகுடுப்பைக்காரன் அல்லது வழி தவறிய குடிகாரனோ எப்படி வர முடியாதோ அதே போலத்தான் கவிதைகளும் வர முடியாத ஒரு விதமான வாழ்வில் நாம் இருக்கிறோம்".
- வண்ணதாசன்